"... காட்டில் சென்று ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்வதில் பெறும் பலன்களை அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரை நினைப்பதிலும்,அவரை வழி படுவதிலுமே பெற்றுவிடலாம். வேதம், ஆகமம்,புராணம், இதிகாசம் முதலியவற்றில் ஆண்டவனைப் பற்றி உண்மையைத் தெளிவாக விளக்கவில்லை. அவைகளில் ஈடுபடுவதன் மூலமாக அற்ப சித்துகளை வேண்டுமானால் அடையலாம். ஆனால் ஆண்டவனைக் கண்டு அனுபவிக்க முடியாது. ஆகையால் வேதம்,ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகளில் மனதைச் செலுத்தாமல் நேரே ஆண்டவனை வழிபடுவதற்கு முயலுங்கள். சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம்,சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம். அவற்றில் ஆண்டவனைப் பற்றி ஏதோ ஓரளவு கோடிட்டுக் காட்டி இருக்கிறதே ஒழிய போதுமான அளவு விளக்கமாகச் சொல்லவில்லை. ஆதலால் அதிலும் வாழ்க்கையை வீணாக்க வேண்டாம்.
''நான் சைவ சமயத்தில் லட்சியம் வைத்திருந்தது போல, வேறு யாரும் வைத்திருக்க முடியாது. நான் அந்த சமயப் பிடியிலிருந்து விலகிய பிறகுதான் ஆண்டவர் ஏறா தலையில் ஏற்றி வைத்திருக்கின்றார். என்னைப் போல் நீங்களும் சமயத் தளைகளை அறுத்துக்கொண்டு நேரே ஆண்டவனை வழிபடும் வழியில் ஈடுபடுங்கள்
நான் இந்த ஏறாத தலையில் ஏறியதற்குக் காரணம் தயவுதான். தயவு என்னும் கருணைதான், என்னைத் தூக்கி விட்டது. அந்தத் தயவிற்க்கு மனதில் ஒருமை வரவேண்டும். தயவு வந்தால் பொரிய மலைமேல் ஏறலாம். தெய்வத்தைத் தொரிந்து கொள்ளாது என்னைத் தெய்வம் என்று மக்கள் நினைந்து சுற்றுகிறார்களே, இந்த வேதனைத் தாங்க முடியவில்லை. சாதாரண மக்கள் தெய்வத்தைத் தொரிந்து கொள்ளாமைக்கு காரணமும் உண்டு. அதன் சுவையைத் தொரிந்துக்கொள்ள, அனுபவிக்க தொரியவில்லை. தெய்வ இச்சை அனுபவிக்கத் தொரிந்துக்கொண்டால் தெய்வத்தினிடம் பிரியம் ஏற்படும். ஆதலால் தெய்வத்தை அனுபவிக்க தொரிந்துக் கொள்ள வேண்டும் என்ற குறிக்கோளுடன் தெய்வத்தை வழிபடுங்கள்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!
என்னும் மந்திரத்தை ஆண்டவர் வெளிப்படையாக எனக்கு அருளியிருக்கிறார். தயவு கருணை,அருள் என்பன ஒரு பொருளைக் குறிக்கும். அதுவே ஒப்பற்ற தயவுடைய பேரறிவாகும். இதுதான் உண்மை. இதை உணர்ந்து செயல்படுங்கள். நீங்கள் அனுபவித்து மகிழும்படி ஆண்டவர் வருவார். அவர் வந்தவுடன் எல்லா நன்மையும் பெற்றுக் கொள்வீர்கள். இது சத்தியம்! ஆண்டவான் கட்டளை.''
இவ்வாறு வள்ளல் பெருமான் அருள் உபதேசம் செய்த மூன்று மாதங்கள் கழித்து ஒருநாள் சித்திவளாகக் குடிலில் தாம் வழிபட்டு வந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவாரின் அருஉருவமான திருவிளக்கைத் தம் குடிலில் இருந்து வெளியே எடுத்து வைத்து, ''இதைத் தடைபடாது ஆராதியுங்கள்; இந்தக் கதவைச் சாத்திவிடப் போகிறேன். ஆண்டவர் இப்போது தீப முன்னிலையில் விளங்குகிறபடியால் இனி கொஞ்ச காலம் எல்லோரும் உங்களுடைய காலத்தை வீணாகக் கழிக்காமல் நான் பாடி இருக்கும் நினைந்து நினைந்து' என்று தொடக்கமுடைய 28 பாசுரங்கள் அடங்கிய பதிகத்தில் கண்டபடி தெய்வ பாவனையை இந்தத் தீபத்தில் செய்யுங்கள். நான் இப்போது இந்த உடம்பில் இருக்கிறேன். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன் " என்று திருவாய் மலர்ந்து அருளினார்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!.
மேலும் வள்ளலாரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் www.vallalar.org இணைய தளத்திற்க்கு கூட சென்று பார்க்கலாம்.
No comments:
Post a Comment