நாம் எல்லோரும் இறைவனிடம் வேண்டுகிறோம். எவ்வாறு வேண்டுகிறோம் என்பதை நீங்களே நன்றாக அறிவீர்கள். நாம் வேண்டுவன பெரும்பாலும் இந்த உலக போகப் பொருள் சம்பந்தப்பட்டதாகவே இருப்பதைக் காணலாம். ஆனால் வள்ளல் பெருமானாரோ எப்படி வேண்டுகிறார்கள் தெரியுமா?,
ஐயா நான் வேண்டுதல் கேட் டருள்புரிதல் வேண்டும் (9)
அடிமுடிகண் டெந்நாளும் அனுபவித்தல் வேண்டும் (10)
பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும் (11)
புகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல் வேண்டும் (12)
எய்யாத அருட்சோதி என்கையுறல் வேண்டும் (13)
இறந்தஉயிர் தமைமீட்டும் எழுப்பியிடல் வேண்டும் (14)
நையாத வண்ணம்உயிர் காத்திடுதல் வேண்டும் (15)
நாயகநின் தனைப்பிரியா துறுதலும்வேண் டுவனே (16)
ஐயா, நினது அடியையும் முடியையும் எந்த நாளும் அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும். அது மட்டுமல்ல, ஐயா நான் சொல்லும் வார்த்தை நினது வார்த்தையைப் போன்று பொய்க்காமல் பலிக்க வேண்டும் ஆதலால் அத்தகைய மெய் எனக்கு நீ அளிக்க வேண்டும். அது மட்டும்போதாது ஐயா, எவாராலும் எவ்வகையாலும் அறிதல்க்கறிய நினது அருட்பெருஞ்ஜோதி செங்கோலை என் வசம் ஆக்குதல் வேண்டும் என்று வேண்டுகிறார். அடுத்து அவர் வேண்டுவது என்ன தெரியுமா? ஐயா நான் இறந்தவர்களை மீண்டும் எழுப்பி உயிர்ப்பித்தல் வேண்டும். துன்பத்தால் துவண்டு போகாது உயிர்களைக் காத்து நின்று நான் மெய் அருள் புரிதல் வேண்டும். என்னுடைய நாயகனே, உன்னை ஒரு போதும் பிரியாத நிலை எனக்கு அடைதல் வேண்டும் என்று உளம் கனிந்து அருள் வழிந்து பொது நோக்குடன் அருட்பெருஞ்ஜோதி இறைவனைப் பார்த்து வேண்டுகிறார்.
ஆக நாம் நம் அறிவினிற்கு சிறிதும் எட்டாத அல்லது சிறிதும் தோன்றாத இத்தகைய மாபெரும் வேண்டுதலை நாமும் தினமும் ஒதி அத்தகைய அருள் பெருவோமாக!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
2 comments:
தாங்கள் தேர்வு செய்த பாடலும், தங்கள் விளக்கமும் மிகவும் அருமையாக இருக்கிறது.
அந்த வள்ளலார் பற்றி மேலும் எழுதுங்கள். அவர் பாடலில் நிறைந்துள்ள இறையாண்மையை மேலும் விளக்குங்கள்.
நன்றி
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment